பட்டம் பெற்றும், பட்டமோ இன்றும்
நீ
காலமிது காலமிது என்று கவிஞர் அன்று சொன்ன காலம் போனதே,
காலமிது காலமிதென்று விஞ்ஞானம் அறைகூவும் காலமிது வந்தது
ஞாலத்தில் அரைநூற்றாண்டில் கணினியின் வரவால் வந்த மாற்றம்
சாலவும் சிறந்த
மாற்றம்,பெண்களது பொற்காலம் என்பதே உண்மை.
வீடென்கிற இலக்குமண கோடினைத் தாண்டா காலமின்று போனதே,
ஏடும் எழுத்தும் கற்றதால் பட்டமும், பதவியும் கூட இன்று வந்ததே,
நாட்டை அரசாளும் பெண்மணிகளும் இன்று நம்மிடையி லுண்டே,
நாட்டிற்கு பரிசுகள் வென்று வந்த வீராங்கனைகளும் இன்றுண்டே.
வீட்டின் திருவிளக்கு,நாட்டின் ஒளிவிளக்கு,அழிக்கும் நாளமாகுதோ,
ஒட்டியிருந்தால் சுதந்திர நாடு, வெட்டிப் பிரிந்தால் பாசறை தானே,
வேட்கையின் மாயவலை இன்று இனிக்கும்,,பின்னர் பசியே தராது,
மாட்சியுமிராது, சிலரது பேராசையால் பெண்மைக்கு களங்கம் வந்தது.
அளவிற்கும் மீறினால் அமுதும் நஞ்சே, சுதந்திரமே நஞ்சாகுதோ,
விளைபயிர் வேலிக்கே விடமாகுதோ,,வன்முறைக்கு பாலமாகுதோ.
வளரும் தீவிரவாதச் செயலுகளுக்கு மதம் மாற்றும் பரிவேஷமோ,
எளிதாக கீழ்ப்படியும் பலவீனமோ,,வெளிநாட்டிலொரு சிறைவாசமோ.
பறக்கப் பறக்க பட்டம் பெருமை தரும், திசையை திருப்புவது காற்றே,
காற்றுக்கு அடிமையாகாதே, உன்னையே இன்று நீ அறியும்,நேரமிது.
இயக்குபவன் கீழே உன் உயர்விற்காக என்றுமேதுணையிருப்பான்.
இயக்குவது உன்தேசம்,,வீணர்கள்,சிலரால் உன்பெண்மைக்கு களங்கமே..
தீயசக்திகளின்
வலையில் நீ வீழ்ந்திடாதே, யாரையும் வீழ்த்திடாதே,
No comments:
Post a Comment