Saturday, September 26, 2020

சங்கீதமே உன் ஜீவன்...எங்கும் என்றும்...இந்தத் தேகம் மறைந்தாலும்...இங்கே தங்குவாய்... இசையாய் நீ  மலர்வாய்

மண் மறைந்த நமது அபிமான பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியனுக்குக  என் நினைவாஞ்சலி
  
இசைப் பயணங்கள் முடிவதில்லை...
 
RIP SPB: Why the legendary singer's passing marks the end of a musical era  in Indian cinema- Edexlive

சங்கீதமஂ ஒரு  சாகரம், அதில் நீந்தத் துடிப்பவரோ, ஆயிர மாயிரம்,
எங்கும்  அதற்கு  ஒரு வரவேற்பு, கற்பவற்க்கோ என்றும் பரவசம்
தங்கு தடையின்றி நீந்தி, கரை காண்பவர்கள் அபூர்வம் சிலரே,
சங்கீதமும் திரையுலகும் ஒரு நாணயத்தின் இருமுகங்க ளன்றோ.

திரை உலகில் பாடவரும் வாய்ப்பு, திறமைக்கு தரும் நற்சான்றே,
விரைந்து வந்து மறைந்து போன பாடகர்கள் எத்தனை  எத்தனை,
கரை தாண்டி வந்தாய்,  கலைப் பொக்கிஷம் ஆகி நிறைந்தாய் நீ,
வரையரை தாண்டி, அரை நூற்றாண்டும் தாண்டி பாடி நின்றாய்.

ஆயிரம் நிலவை வரவழைத்துத் துவங்கிய நீ பாடியதோ நாற்பது,
ஆயிரம் பாடல்கள் ,ஈரேழு பதிநான்கு மொழிகளில் பாடி வந்தாய்,
வேய் குழலில் துவங்கி,தாய்மொழியும்,தமிழும் உவந்து பாடினாய்,
மெய் சிலிர்க்கப் பாடவே கோலிவுட்டும் பாலிவுட்டும்,மகிழ்ந்ததே,

நடிகரின் குரலோடி ணைவது கடினமே இரண்டறக் கலந்தாய் நீ
துடிக்கும் காதலும் ஆடலும்,உன் குரலின் இனிமைக்கு  மகுடமாக
அடித்தளமாகி நின்றாய் நீ, நிலவுகளும் உன்பாடலில் விடிந்ததே,
நடிகனுமானாய், நிஜவாழ்விலும் நடிக்காமல், வாழ்ந்து காட்டினாய்!

புகழீட்டிய போதும் எளிமை,கருணை, இவைக்கும் உவமையானாய்
மகிழ வைத்தாய் என்றும் ,கூடவே,சோகமும் குரலில் தந்தாய் நீ,
அக முவந்து மனதில் சுமந்து நடந்தோம், உன்பாடல்களைப் பாடியே
நிகரிலையே உனக்கும்,இளைய நிலாவிற்கும்,வான் நிலாவிற்குமே. 

வைரமுத்துவின் கவிதைக்கு குரல் கொடுத்தாய், உயிர் கொடுத்தாய்,
கர்நாடக இசை பயிலாது எமக்கொரு சங்கராபரணம் பொழிந்தாய்,
ஒரு காதல் ரோஜாவைத் தேடிச் சென்றாய், கண்ணீரை வரவழைத்தாய்,
ஒரு மலரின் மெளனத்தை உன் குரலால் மையலில் பேசவைத்தாய்.    

 எத்தனை முறை  ஆயர்பாடி கண்ணனை என்முன் நிறுத்தி மகிழ்ந்தாய்,
நித்தமும் எமை துக்கத்தி லாழ்த்தியே, நிலாப் பயணமானாய் நேற்று,
மொத்தமாக நீ போயினும், உனக்கே நீயே அஞ்சலி பாடினும் உன்குரல்,
நெஞ்சில் மாயாது, இனிதே குடியிருக்கும், உன் பயணஙகள் ஓய்வதில்லை!


Tuesday, September 15, 2020

                              

மானுடமஂ பாடிய வானமஂபாடி

கலை உலகின் பொக்கிஷமான,மறைந்த  எம்.எஸ்.எஸ் ஸின் 104 ாம் பிறந்த நாளில் என் நினைவாஞ்சலி

Celebrating a legend: A century of MS Subbulakshmi through 10 songs

 

ஆய கலைகளாமஂ அறுபதஂதி நானஂகிலஂ ஒனஂறினை,   
ஏய உணரஂதஂதி வளரஂத்திய கலைபஂ பொகஂகிஷமஂ நீ,   
தூய மொழியிலஂ இறை வணகஂகமஂ பாடியே எமஂமை, 
மயகஂக வைதஂது இயகஂக வைதஂத வானமஂபாடியுமஂ நீ.
 
ஏழு ஸஂவரஙஂகளுகஂகுளஂ அமைநஂதவுனஂ பாடலஂகளோ, 
விழிகளை உணர வைகஂகுதே, எனஂறுமஂ ஒலிகஂகுதே,   
ஏழு மலையானஂ அனஂறுமஂ  இனஂறுமஂ துயிலுணரவே, 
மொழி  பேதமினா எனஂறுமஂ அதிகாலை முழஙஂகுதே.
 
வயதோபதஂது, அரஙஂகேறியதோ, உச்சியி லிருந்தே, 
இயக்கி வருமிந்தச் திருச்சிரா மலையான் முன்னே,
வியத்தகு பஜனைகள்,சென்னையில் முழங்கவே, 
வயதிற்கு வரா சிறுமியுன் ,குரல் வயதை மிஞ்சவே.
 
செம்மங்குடியின் மாணவி,  இயல்பான குரல் வளம், 
சிம்மாசனத்திற்கே  இடம், பதினேழு வயதில் மேடை, 
இம்மியளவும் தவறா குரலினிமை,கேள்விக்கு சுகமே, 
கம்பீர முகம்,எளிமையின் சிகரம் வேள்விக்கு சமமே,
 
அரிதாரம்பூசியே, திரையுலகிற் கொரு  முகமோ,  
 திரையில் பாடலுடன் ஆடலையும் இணைத்ததோ,    
 உரையும் 'அபூர்வ முகம் சிந்தாமணியோடு நின்றதே, 
குரலோடு அம்மாவுன் புகழோ வானளவு கூடியதே.
 
திருமாலின் 'குறையொன்றுமில்லை'யும் பாடினாய் நீ
பெருமையோடு தேசத்தந்தையு முனை யழைக்கவே,
 பெருந்தவமன்றோ,பஜனும் உன்குரலு மிணையவே, 
அருமையாய் 'ஹரிஓம்ஹரோ' பஐனும் பிறந்ததே
 
இசைக்குஓர் எல்லை இல்லை, இதற்குச் சான்றும் நீ, 
அசைந்தவுன் உதடுகள்,மேலை நாட்டிலும் ஒலிக்க   
விசையுறு பந்தன்ன,ஐக்கியநாட்டு சபையுமுனை, 
இசைந்தழைக்க,' மைத்திரீம் பஜத' வும் பிறந்ததே.

பெருமைகள் அடுக்கி  உரைப்பினும்,மிகை வராதே,
வரம் பெற்ற குரலால் ஈசனை நாடி, பாடி வந்தவுன் 
மராளியைச் சொல்வதா ,பஜகோவிந்தமோ, கனகம்,
தருமிந்த துதி ,பஞ்சரத்னமாலை யாவும் சிறந்ததே.
 
விருதுகள் யாவும் உனக்கு மாலையிட போட்டியோ, 
விருதுகள்பல, பத்ம விருதுகள் யாவும் தேடி வந்திட,
பாரத இரத்தினா விற்கு உயர்வாய் வேறு முளதோ,
பாரதத்தின் வானம்பாடி புனைப்பெயரும் ஈன்றாய்.
 
தலைமுறைக்கொரு  அரிய அவதாரம் நீ, உலகநீதியே,
கலைவுலகம் என்றும்  நினைக்கும் அவதாரமுமாகி
நிலையிலா வுலகில் அன்றுமின்றும் கோகிலமே நீ,
விலை  மதிப்பற்ற ஓர் கோஹினூர் வைரமுமானாய்,
 
ஈட்டிய செல்வம், உரிமம், ஈகையாக்கி உயர்ந்தாய்,
எட்டிப் பிடிக்கப் யியலா கொடையும் தந்துவந்தாய் 
ஈட்டிய 'ரமண்மக்ஸஸே' விருதும் இதன் சான்றே ,
நாட்டமுறு மூக்குத்தி,காஞ்சிப் பட்டு உன் முத்திரை.
 
கடலும் வானும் நீலம், உன் பட்டுச் சேலையும் நீலமே,
கடல்தாண்டி தமிழுக்கும் தேசத்திற்கும் புகழ் ஈன்றாய்,
மடல் ஓன்று புனைய நினைக்கக் கவிதையுமானதே
ஏடெடுத்து வணங்கியே நினை வாஞ்சலியுமிதோ

  Comedian   par excellence ..a tribute Comedy, more often enjoyed  by world all over,  Laughter, the best medicine, an accepted fact, M...