மானுடமஂ பாடிய வானமஂபாடி
கலை உலகின் பொக்கிஷமான,மறைந்த எம்.எஸ்.எஸ் ஸின் 104 ாம் பிறந்த நாளில் என் நினைவாஞ்சலி
ஆய கலைகளாமஂ அறுபதஂதி நானஂகிலஂ ஒனஂறினை,
ஏய உணரஂதஂதி வளரஂத்திய கலைபஂ பொகஂகிஷமஂ நீ,
தூய மொழியிலஂ இறை வணகஂகமஂ பாடியே எமஂமை,
மயகஂக வைதஂது இயகஂக வைதஂத வானமஂபாடியுமஂ நீ.
ஏழு ஸஂவரஙஂகளுகஂகுளஂ அமைநஂதவுனஂ பாடலஂகளோ,
விழிகளை உணர வைகஂகுதே, எனஂறுமஂ ஒலிகஂகுதே,
ஏழு மலையானஂ அனஂறுமஂ இனஂறுமஂ துயிலுணரவே,
மொழி பேதமினா எனஂறுமஂ அதிகாலை முழஙஂகுதே.
வயதோபதஂது, அரஙஂகேறியதோ, உச்சியி லிருந்தே,
இயக்கி வருமிந்தச் திருச்சிரா மலையான் முன்னே,
வியத்தகு பஜனைகள்,சென்னையில் முழங்கவே,
வயதிற்கு வரா சிறுமியுன் ,குரல் வயதை மிஞ்சவே.
செம்மங்குடியின் மாணவி, இயல்பான குரல் வளம்,
சிம்மாசனத்திற்கே இடம், பதினேழு வயதில் மேடை,
இம்மியளவும் தவறா குரலினிமை,கேள்விக்கு சுகமே,
கம்பீர முகம்,எளிமையின் சிகரம் வேள்விக்கு சமமே,
அரிதாரம்பூசியே, திரையுலகிற் கொரு முகமோ,
திரையில் பாடலுடன் ஆடலையும் இணைத்ததோ,
உரையும் 'அபூர்வ முகம் சிந்தாமணியோடு நின்றதே,
குரலோடு அம்மாவுன் புகழோ வானளவு கூடியதே.
திருமாலின் 'குறையொன்றுமில்லை'யும் பாடினாய் நீ
பெருமையோடு தேசத்தந்தையு முனை யழைக்கவே,
பெருந்தவமன்றோ,பஜனும் உன்குரலு மிணையவே,
அருமையாய் 'ஹரிஓம்ஹரோ' பஐனும் பிறந்ததே
இசைக்குஓர் எல்லை இல்லை, இதற்குச் சான்றும் நீ,
அசைந்தவுன் உதடுகள்,மேலை நாட்டிலும் ஒலிக்க
விசையுறு பந்தன்ன,ஐக்கியநாட்டு சபையுமுனை,
இசைந்தழைக்க,' மைத்திரீம் பஜத' வும் பிறந்ததே.
பெருமைகள் அடுக்கி உரைப்பினும்,மிகை வராதே,
வரம் பெற்ற குரலால் ஈசனை நாடி, பாடி வந்தவுன்
மராளியைச் சொல்வதா ,பஜகோவிந்தமோ, கனகம்,
தருமிந்த துதி ,பஞ்சரத்னமாலை யாவும் சிறந்ததே.
விருதுகள் யாவும் உனக்கு மாலையிட போட்டியோ,
விருதுகள்பல, பத்ம விருதுகள் யாவும் தேடி வந்திட,
பாரத இரத்தினா விற்கு உயர்வாய் வேறு முளதோ,
பாரதத்தின் வானம்பாடி புனைப்பெயரும் ஈன்றாய்.
தலைமுறைக்கொரு அரிய அவதாரம் நீ, உலகநீதியே,
கலைவுலகம் என்றும் நினைக்கும் அவதாரமுமாகி
நிலையிலா வுலகில் அன்றுமின்றும் கோகிலமே நீ,
விலை மதிப்பற்ற ஓர் கோஹினூர் வைரமுமானாய்,
ஈட்டிய செல்வம், உரிமம், ஈகையாக்கி உயர்ந்தாய்,
எட்டிப் பிடிக்கப் யியலா கொடையும் தந்துவந்தாய்
ஈட்டிய 'ரமண்மக்ஸஸே' விருதும் இதன் சான்றே ,
நாட்டமுறு மூக்குத்தி,காஞ்சிப் பட்டு உன் முத்திரை.
கடலும் வானும் நீலம், உன் பட்டுச் சேலையும் நீலமே,
கடல்தாண்டி தமிழுக்கும் தேசத்திற்கும் புகழ் ஈன்றாய்,
மடல் ஓன்று புனைய நினைக்கக் கவிதையுமானதே
ஏடெடுத்து வணங்கியே நினை வாஞ்சலியுமிதோ
No comments:
Post a Comment