கொலுவிருப்பாள்
என்றுமெமைக் காப்பதற்க்கே…
புரட்டாசி வந்தால் தமிழர்௧ளின் விழாக்களின் முற்றுகைகளே இரவு பகல் தவறா தென்றும் வரும் உற்சவங்கள் பலவுளதே, வரும் வளர்பிறை தொட்டுத் துவங்கும் ஒன்பது நாட்களே, விரும்பும் வெற்றியோ, தின்மையின் மீது நன்மையின் விஜயமோ
நவராத்திரி நமக்கருளுவது நல்லறிவு,நன்மைகள் பயக்கவே, இவை யொன்பது தினங்களும் மூன்று தேவிகளுக் குரியதே துவக்கத்தின் மூன்று இரவுகளும் துர்க்காதேவிக் குரியதே. சிவ சக்தியும் மலை மகளாகி நந்தியில் பவனி வருபவளே.
துர்க்கையாகி மாகாளியாகி சிவப்பாகி வந்தெமை யருள்பவளே, அருளும்,செயலும் துணிவும் தந்து எமை ஊக்குவிப்பவளே , இருந்தாய் கன்னியாகி, கமண்டலமுமாய் தோற்றம் தந்தாய், திருநீற ணிந்தவனை மணந்தாய். பிறைசூடி காட்சி தந்தாய்.
இலக்கமோ வீரம்,துர்க்கையாகி காட்சி தந்தெமைக் காத்தாய், வலிமைக்கு ஊக்கம் தநது வன்முறைகளை ஒழித்து வந்தாய். இலக்ஷ்மியாகி நடுவில் வந்தாய் அருளுக்கும் பொருளுக்கும், இலக்கணமாகி நின்றே, செல்வத்தை எமக்கு தந்தருள்வாய்
இறுதி மூன்று இரவுகளும்,கலைவாணிக்கு மட்டும் சொந்தமே நெறி தவறாக் கல்வியும்,முறை தவறா நல்லறிவும் , உறுதுணையாகி நி்ற்பாள்,நற்றமிழில் கவிதை செய்வாள் கற்றவர்க்குச் சென்ற இடமெலாம் சிறப்பு, இதனை நிஜமாக்குவாள்.
தின்மைகளின் அரக்கிகளை கீழடக்கி, நன்மை தருவதற்கு , என்றும் வெற்றிகள் நம்மை அடைய,இதோ தசமியும் வருகுதே வென்றிடும் நாளைக்காக, வேள்வி நம்மவர் யாவரும் மன்றாடிட, பத்தாம் தினமு முதிக்௧, நவராத்திரிகளும் நிறைவுறுதே.
DR.கிருஷ்ணமூர்த்தி
No comments:
Post a Comment